வினேஷ் போகாட் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

வினேஷ் போகாட்டின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.
வினேஷ் போகாட் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
வினேஷ் போகாட் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
1 min read

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்தம் போட்டியில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவடைவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று (ஆகஸ்ட் 13) இரவு 9.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தீர்ப்பு ஆகஸ்ட் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.

இதைத் தொடர்ந்து வினேஷ் போகாட்டின் மனுவை தள்ளுபடி செய்தது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in