சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை: பாண்டியாவைக் கடுமையாக விமர்சனம் செய்த காவஸ்கர்

"இது மிகவும் சாதாரணமான பந்துவீச்சு. பாண்டியா கேப்டன் செய்த விதமும் சாதாரணமாக இருந்தது”.
பாண்டியாவைக் கடுமையாக விமர்சனம் செய்த காவஸ்கர்
பாண்டியாவைக் கடுமையாக விமர்சனம் செய்த காவஸ்கர்ANI

பாண்டியா கேப்டன் செய்த விதம் சாதாரணமாக இருந்தது என முன்னாள் கிரிக்கெட் வீரர் காவஸ்கர் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனி களமிறங்கினார்.

ஹார்திக் பாண்டியா வீசிய இந்த ஓவரில், தான் விளையாடிய முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரளவைத்தார் தோனி. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த ஒரு ஓவரை குறித்து காவஸ்கர் இன்னிங்ஸின் இடைவேளையில் பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:

“நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான பந்துவீச்சை நான் பார்க்கிறேன். ஒரு சிக்ஸர் என்றால் பரவாயில்லை. பேட்டர் அப்படி ஒரு பந்தை எதிர்பார்த்து நிற்கும் போது, மீண்டும் ஒரு லெந்த் பந்தை வீசினார். 3-வது பந்தை ஃபுல் டாஸாக லெக் சைடில் வீச அதுவும் சிக்ஸர். இது மிகவும் சாதாரணமான பந்துவீச்சு. பாண்டியா கேப்டன் செய்த விதமும் சாதாரணமாக இருந்தது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in