தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்டர் வி.பி. சந்திரசேகர் பிறந்த தினம் இன்று.
1988-89 இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 56 பந்துகளில் சதம் அடித்தார். அன்றைய காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் இந்தியரால் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இது.
இதன் எதிரொலியாக இந்திய அணியிலிருந்து அழைப்பு வந்தது. எனினும் இவரால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 1988 முதல் 90 வரை இந்தியாவுக்காக விளையாடிய சந்திரசேகர், 7 ஒருநாள் ஆட்டங்களில் 1 அரை சதம் மட்டுமே எடுத்தார்.
1987-88-ல் ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு அணி வென்றபோது முக்கியக் காரணமாக அமைந்தார்.
கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு, நிர்வாகத்திலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இந்திய அணியின் தேர்வுக்குழுவில் பணியாற்றிய சந்திரசேகர், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் முக்கியக் காரணியாக இருந்தார்.
2019-ல் வி.பி. சந்திரசேகர் மரணம் அடைந்தார்.