இங்கிலாந்து ஒருநாள் தொடர்: வருண் சக்ரவர்த்தி சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று கலக்கினார்.
இங்கிலாந்து ஒருநாள் தொடர்: வருண் சக்ரவர்த்தி சேர்ப்பு
ANI
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி அண்மைக் காலமாக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். நடப்பு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 12.16 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அவர், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று கலக்கினார். ஹாரி புரூக்கை மட்டும் மூன்று ஆட்டங்களில் வீழ்த்தினார்.

வருண் சக்ரவர்த்தியின் எழுச்சி, சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் சேர்க்கப்படலாம் என்ற தவிர்க்க முடியாத விவாதத்தை எழுப்பியது. அவரும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியுடன் நாக்பூர் சென்றார்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு முன்னோட்டமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில், கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக வருண் சக்ரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவுள்ளார். குல்தீப் யாதவ், முஹமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு, அணிக்குத் திரும்புவதால் கூடுதல் பந்துவீச்சாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முஹமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

முன்பு, காயம் காரணமாக முதலிரு ஒருநாள் ஆட்டங்களில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்பதால், அவருக்குப் பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் பும்ரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு பும்ரா குறித்து எதுவும் இடம்பெறவில்லை. அணி வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in