
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் நியூயார்கில் நடைபெற்றது. இதில் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இயன் நெபோ ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.
இப்போட்டியின் வரலாற்றில் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருவர் பகிர்ந்துகொள்வது இதுவே முதன்முறை.
இதில் மகளிர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். காலிறுதியில் 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் ஸு ஜினாவை வீழ்த்திய வைஷாலி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அரையிறுதியில் சீனாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை ஷு வென்ஜுனை எதிர்கொண்டார் வைஷாலி. இதில் 0.5-2.5 என்ற கணக்கில் வைஷாலி தோல்வியடைந்தார்.
இதன்மூலம், வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். வைஷாலியின் வெற்றிக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.