
ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு நிறைய பிரபல வீரர்கள் அவர்களுடைய அணிகளால் தக்கவைக்கப்படவில்லை.
ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்கள் அடங்கிய பட்டியலை இன்று மாலை வெளியிட்டன. எதிர்பார்ப்புக்கு மாறாக நிறைய பிரபல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதில் கேப்டன்களும் அடக்கம். நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை விடுவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்: கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், தீபக் சஹார்.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், டிம் டேவிட்.
ராயல் சேலஞ்சர்ஸ்: பெங்களூரு: கேப்டன் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், சிராஜ், கேம்ரூன் கிரீன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், வெங்கடேஷ் ஐயர்.
பஞ்சாப் கிங்ஸ்: அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஹால், பட்லர், டிரெண்ட் போல்ட், அஸ்வின்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஸ்வர் குமார்.
தில்லி கேபிடல்ஸ்: கேப்டன் ரிஷப் பந்த், வார்னர், நோர்கியா.
குஜராத் டைடன்ஸ்: முஹமது ஷமி, டேவிட் மில்லர்.
லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ்: கேப்டன் கேஎல் ராகுல், ஸ்டாய்னிஸ், குயிண்ட்ன் டி காக்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் இடம்பெறவுள்ள பிரபல இந்திய வீரர்கள்
ரிஷப் பந்த், கேஎல் ராகுல், அஸ்வின், நடராஜன், ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், சிராஜ், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, கிருனாள் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷல் படேல், தீபக் சஹார், சஹால், ஆவேஷ் கான், நிதிஷ் ராணா, புவனேஸ்வர் குமார்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் இடம்பெறவுள்ள பிரபல வெளிநாட்டு வீரர்கள்
மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் பட்லர், சாம் கரண், வார்னர், நோர்கியா, ரச்சின் ரவீந்திரா, கான்வே, பேர்ஸ்டோ, டு பிளெசிஸ், கேம்ரூன் கிரீன், லிவிங்ஸ்டன், குயிண்டன் டி காக், மாக்ரம், டிம் டேவிட், ஹசரங்கா, போல்ட், மில்லர், மெக்கர்க், நூர், சால்ட், குர்பாஸ், ஸ்டாய்னிஸ், நவீன், ரபாடா, ஜாக்ஸ், யான்சென்.