ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்ஸ் 2024 வருகிற ஆகஸ்ட் 28 அன்று தொடங்குகிறது. இதில், இந்திய பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவர் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், கடந்த 12 மாதங்களில் பிரமோத் பகத் ஊக்க மருந்து சோதனையில் மூன்று முறை தோல்வி அடைந்த காரணத்தால் அவருக்கு 18 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பிரமோதால் பங்கேற்க முடியாது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் ஊக்க மருந்து தடுப்பு சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை 29 அன்று விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றம் நிராகரித்தது.