டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் கோவை, திண்டுக்கல் அணிகள்!

கடந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் கோவை, திண்டுக்கல் அணிகள்!
டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் கோவை, திண்டுக்கல் அணிகள்!@tnpl
1 min read

டிஎன்பிஎல் இறுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதவுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 லீக் போட்டி கடந்த ஜூலை 5 அன்று தொடங்கியது.

இதில் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் தகுதிச் சுற்றில் திருப்பூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ். நேற்று நடைபெற்ற 2-வது தகுதிச் சுற்றில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின.

இதில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபாரமாக விளையாடிய அஸ்வின் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் இடையேயான இறுதிச் சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in