டிஎன்பிஎல் 2024: அட்டவணை வெளியீடு

முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
டிஎன்பிஎல் 2024: அட்டவணை வெளியீடு
டிஎன்பிஎல் 2024: அட்டவணை வெளியீடு@tnpl

8-வது டிஎன்பிஎல் போட்டி ஜூலை 5 அன்று சேலத்தில் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 லீக் போட்டி 2016 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டி ஜூலை 5 முதல் தொடங்கவுள்ளது. 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஜூலை 5 அன்று சேலத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இறுதிச் சுற்று ஆகஸ்ட் 4 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

லீக் ஆட்டங்கள் சேலம் (ஜூலை 5 முதல் 11 வரை), கோவை (ஜூலை 13 முதல் 18 வரை), திருநெல்வேலி (ஜூலை 20 முதல் 24 வரை), நத்தம் (ஜூலை 26 முதல் 28 வரை) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டம் நத்தத்தில் நடைபெறுகிறது. தகுதிச் சுற்று 2 மற்றும் இறுதிச் சுற்று சென்னையில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடும், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆட்டங்கள் அனைத்தும் மதியம் 3.15 மற்றும் இரவு 7.15 ஆகிய நேரங்களில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in