டிஎன்பிஎல் போட்டி இன்று தொடக்கம்!

முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டிஎன்பிஎல் போட்டி இன்று தொடக்கம்!
டிஎன்பிஎல் போட்டி இன்று தொடக்கம்!@tnpl
1 min read

8-வது டிஎன்பிஎல் போட்டி இன்று சேலத்தில் தொடங்குகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 லீக் போட்டி 2016 முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

சேலத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நடப்பு சாம்பியன்ஸான லைகா கோவை கிங்ஸும் மோதுகின்றன. இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இறுதிச் சுற்று ஆகஸ்ட் 4 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

லீக் ஆட்டங்கள் சேலம் (ஜூலை 5 முதல் 11 வரை), கோவை (ஜூலை 13 முதல் 18 வரை), திருநெல்வேலி (ஜூலை 20 முதல் 24 வரை), நத்தம் (ஜூலை 26 முதல் 28 வரை) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டம் நத்தத்தில் நடைபெறுகிறது. தகுதிச் சுற்று 2 மற்றும் இறுதிச் சுற்று சென்னையில் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in