திலக் வர்மா ரிடையர்ட் அவுட்: ஜெயவர்தனே விளக்கம்

"திலக் வர்மாவுக்கு வேகமாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது."
திலக் வர்மா ரிடையர்ட் அவுட்: ஜெயவர்தனே விளக்கம்
ANI
1 min read

திலக் வர்மா ரிடையர்ட் அவுட் ஆனது குறித்து மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி பந்து வரை ஹார்திக் பாண்டியா களத்தில் இருந்தும், மும்பைக்கு அது பலன் தரவில்லை. இம்பாக்ட் வீரராக 5-வது வரிசையில் களமிறங்கிய திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணியின் வெற்றிக்கு சிக்ஸரும் பவுண்டரியும் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா சிரமப்பட்டு வந்தார். கடைசி இரு ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷார்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே மும்பை எடுத்தது. கடைசி 7 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், திலக் வர்மா ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.

இளம் வீரரை இக்கட்டான சூழலில் ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேற்றுவது அவரை மனதளில் எந்தளவுக்குப் பாதிக்கும், அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றியைத் தேடித் தரக்கூடிய வீரராக இருக்கும் ஒருவரை இப்படி நடத்தப்படலாமா என்கிற விமர்சனம் ஒருபுறம். மறுபுறம், திலக் வர்மாவை ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேற்ற முடிவு செய்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும், 7 பந்துகள் மட்டுமே மீதமிருக்கும் நேரத்தில் அதைச் செய்வதற்கான அவசியம் என்ன என்கிற விமர்சனம் மறுபுறம்.

திலக் வர்மா தொடர்புடைய இந்த முடிவில் சூர்யகுமார் யாதவ் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான காணொளிகள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

இதனிடையே ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயவர்தனே, இதுதொடர்பாக விளக்கமளித்தார்.

"திலக் வர்மாவுக்கு வேகமாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவரால் முடியவில்லை. களத்தில் நேரத்தைச் செலவிட்டதால், அவரால் அதிரடியாக விளையாட முடியும் என நினைத்தோம். கடைசி சில ஓவர்கள் வரை காத்திருந்தோம். ஆனால், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் தடுமாறிதால், புதிதாக ஒருவர் களமிறங்க வேண்டும் என நினைத்தேன். கிரிக்கெட்டில் இதுமாதிரி நடக்கும். அவரை வெளியேற்றுவது நல்ல விஷயம் அல்ல. ஆனால், அதைச் செய்தாக வேண்டியிருந்தது. அந்தத் தருணத்தில் அது தந்திரமான முடிவாக இருந்தது" என்றார் ஜெயவர்தனே.

திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட்

  • ஐபிஎல் 2022 - 131.02 (14 இன்னிங்ஸ்)

  • ஐபிஎல் 2023 - 164.11 (11 இன்னிங்ஸ்)

  • ஐபிஎல் 2024 - 149.64 (13 இன்னிங்ஸ்)

  • ஐபிஎல் 2025 - 113.09 (03 இன்னிங்ஸ்)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in