
டி20-யில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்த முதல் வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளார் இந்திய வீரர் திலக் வர்மா.
2024-25 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி இன்று (நவ.23) தொடங்கியது.
இதில் ஹைதராபாத் - மேகாலயா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஹைதராபாத் வீரர் திலக் வர்மா 67 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 248 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தில் 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் டி20-யில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்த முதல் வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளார் இந்திய வீரர் திலக் வர்மா.
ஏற்கெனவே, தெ.ஆ. அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி இரு டி20 ஆட்டங்களிலும் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.
மேலும், டி20-யில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றார் திலக் வர்மா.
2023, 2024 ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா, ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக மும்பை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.