டி20 உலகக் கோப்பை: இன்று முதல் டிக்கெட் விற்பனை! | ICC T20 World Cup |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
Tickets sales for ICC T20 World Cup to be started today
டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.@icc
1 min read

டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6.45 மணிக்குத் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தனது ஆட்டங்கள் அனைத்தையும் இலங்கையில் விளையாடுகிறது.

இறுதிச் சுற்று அஹமதாபாதில் நடைபெறும். பாகிஸ்தான் தகுதி பெற்றால், இறுதிச் சுற்று கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை, அஹமதாபாத், தில்லி ஆகிய இடங்களில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையில் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் சென்னை ஆட்டங்கள்

  • பிப்ரவரி 8 - நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்

  • பிப்ரவரி 10 - நியூசிலாந்து vs ஐக்கிய அரபு அமீரகம்

  • பிப்ரவரி 13 - அமெரிக்கா vs நெதர்லாந்து

  • பிப்ரவரி 15 - அமெரிக்கா vs நமீபியா

  • பிப்ரவரி 17 - நியூசிலாந்து vs கனடா

  • பிப்ரவரி 19 - ஆப்கானிஸ்தான் vs கனடா

  • பிப்ரவரி 26 - X1 vs X2 (சூப்பர் 8 சுற்று)

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6.45 மணிக்குத் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சமாக ரூ. 100-ல் இருந்து டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. tickets.cricketworldcup.com என்ற தளத்தில் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாகவே டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது. அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

2026 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 20 அணிகளும் ஒரு பிரிவுக்குத் தலா 4 அணிகள் வீதம் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா

  • குரூப் பி - இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜிம்பாப்பேவ, ஓமன்

  • குரூப் சி - இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி

  • குரூப் டி - நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்

முதல் அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான் தகுதி பெறுவதைப் பொறுத்து கொல்கத்தா அல்லது கொழும்பில் மார்ச் 4 அன்று நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மார்ச் 5 அன்று மும்பையில் நடைபெறும். இறுதிச் சுற்று மார்ச் 8 அன்று அஹமதாபாதில் நடைபெறும். பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடைபெறும்.

T20 World Cup | ICC T20 World Cup | T20 World Cup 2026 | Ticket Sales | World Cup Ticket Sales |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in