டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்திய அணியின் நிலைமை என்ன?

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று தொடங்குகிறது.
டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்திய அணியின் நிலைமை என்ன?
ANI
2 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேற, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி குறைந்தது 4 டெஸ்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருமுறை டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்று மிகவும் மோசமான சாதனையை படைத்தது இந்தியா.

இந்நிலையில் இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் நவம்பர் 22 அன்று பெர்த் நகரில் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-0 என வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையெனில், இந்திய அணி மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவின் முடிவுக்கு ஏற்ப, மற்ற அணிகளின் முடிவு எப்படி அமைய வேண்டும் என்ற விவரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

4-0 / 5-0 - இந்திய அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

3-1 / 3-0 / 4-1 - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்டிலாவது டிரா செய்ய வேண்டும்.

2-0 - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்டிலாவது வெற்றி பெற வேண்டும்.

3-2 - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்டிலாவது வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இலங்கை அணி ஒரு டெஸ்டிலாவது டிரா செய்ய வேண்டும்.

2-1 / 1-1 / 1-0 - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இலங்கை அணி ஒரு டெஸ்டிலாவது டிரா செய்ய வேண்டும்.

2-2 - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கட்டாயம் வெல்ல வேண்டும்.

2-3 - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். தெ.ஆ. மற்றும் இலங்கை அணிகள் 4 டெஸ்டுகளில் 2-ல் தோல்வி அடைய வேண்டும்.

1-2 / 1-3 / 0-0 / 0-1 - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும், தெ.ஆ. அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் 2-0 என்றும், இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்றும் வெற்றி பெற வேண்டும். இலங்கை - தென்னாப்பிரிக்கா தொடர் 1-1 என சமனில் முடிய வேண்டும்.

1-4 / 0-2 / 0-3 - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி 3-0 அல்லது 2-0 என வெற்றி பெற வேண்டும். தெ.ஆ. அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் 2-0 என்றும், இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்றும் வெற்றி பெற வேண்டும். இலங்கை - தென்னாப்பிரிக்கா தொடர் 1-1 என சமனில் முடிய வேண்டும்.

0-4 / 0-5 - இந்திய அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in