அடிலெய்ட் ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம்! | Ashes |

அடிலெய்டில் சுழற்பந்துவீச்சுக்கு உதவி இருக்கும் என்ற போதிலும் ஷோயப் பஷீர் கருத்தில் கொள்ளப்படவில்லை.
The Ashes: England announced Playing XI for Adelaide Test
அடிலெய்டில் நடைபெறும் ஆஷஸ் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரேயொரு மாற்றத்தை மட்டுமே செய்துள்ளது.
1 min read

அடிலெய்டில் நடைபெறும் ஆஷஸ் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரேயொரு மாற்றத்தை மட்டுமே செய்துள்ளது.

கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டு ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதலிரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த மூன்று டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஷஸை வெல்ல முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து போராடிக் கொண்டிருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 17 அன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த டெஸ்டில் விளையாடிய கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார். இரு டெஸ்டுகளில் விளையாடியுள்ள கஸ் அட்கிசன் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இவருடைய பந்துவீச்சு ஸ்டிரைக் ரேட் 108, பந்துவீச்சு சராசரி 78.66. இங்கிலாந்து அணியில் மோசமாகப் பந்துவீசியவர்களில் இவரே முன்னணியில் உள்ளார்.

ஜோஷ் டங் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டில் விளையாடினார். இந்தத் தொடரில் மூன்று டெஸ்டுகளில் மட்டுமே இவர் விளையாடியிருந்தாலும், இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரே முதலிடத்தை வகித்தார். எல்லா வகையான கிரிக்கெட்டிலும் ஸ்டீவ் ஸ்மித்தை மொத்தம் 4 முறை வீழ்த்தியிருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

அடிலெய்டில் சுழற்பந்துவீச்சுக்கு உதவி இருக்கும் என்ற போதிலும் ஷோயப் பஷீர் கருத்தில் கொள்ளப்படவில்லை. பகுதிநேரப் பந்துவீச்சாளரான வில் ஜேக்ஸுடன் களமிறங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

அடிலெய்ட் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி

  1. ஸாக் கிராலே

  2. பென் டக்கெட்

  3. ஆலி போப்

  4. ஜோ ரூட்

  5. ஹாரி புரூக்

  6. பென் ஸ்டோக்ஸ்

  7. ஜேமி ஸ்மித்

  8. வில் ஜேக்ஸ்

  9. பிரைடன் கார்ஸ்

  10. ஜோஃப்ரா ஆர்ச்சர்

  11. ஜோஷ் டங்

Summary

The Ashes: England announced Playing XI for Adelaide Test

Ashes | The Ashes | England Playing XI | England Squad | Team England | AUS v ENG | Adelaide | Josh Tongue | Gus Atkinson | Shoaib Bashir | Ben Stokes | Brendon McCullum |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in