35 பந்துகளில் சதம்: 14 வயது வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை!

ஐபிஎல் போட்டியில் குறைவான பந்துகளில் சதமடித்தவர்களில் இரண்டாம் இடம்.
35 பந்துகளில் சதம்: 14 வயது வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை!
ANI
1 min read

ஐபிஎல் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைடன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.

210 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெயிஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்கள். ஐபிஎல் போட்டியில் மூன்றாவது ஆட்டம் என்றாலும், தனது பாணியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் சூர்யவன்ஷி.

தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்துத் தள்ளிய சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். முதல் அரை சதத்தில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடக்கம். எந்த அச்சமும் இல்லாமல் ரஷித் கான் உள்பட அனைவரையும் நொறுக்கித் தள்ள, கரிம் ஜனத்தை கொண்டு வந்தது குஜராத். இவருடைய ஓவரில் தலா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசினார்.

ரஷித் கானின் அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி 35-வது பந்தில் சதத்தை எட்டினார். இதன்மூலம், ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்தார்.

மேலும், ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர்கள் வரிசையில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார். இவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் 11 சிக்ஸர்கள் அடக்கம். பவுண்டரிகள் மூலம் எடுத்த ரன்கள் மட்டும் 94.

ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர்கள்

  • கிறிஸ் கெயில் (ஆர்சிபி) - 30 பந்துகளில் சதம் (எதிரணி: புனே வாரியர்ஸ் இந்தியா, 2013)

  • வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான்) - 35 பந்துகளில் சதம் (எதிரணி: குஜராத் டைடன்ஸ், இன்று)

  • யூசுப் பதான் (ராஜஸ்தான்) - 37 பந்துகளில் சதம் (எதிரணி: மும்பை இந்தியன்ஸ், 2010)

ஐபிஎல் போட்டியில் சதமடித்த இளம் வீரர்கள்

  • வைபவ் சூர்யவன்ஷி - 14 வயது 31 நாள்கள்

  • மணீஷ் பாண்டே - 19 வயது 253 நாள்கள்

  • ரிஷப் பந்த் - 20 வயது 218 நாள்கள்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in