
பிஜிடி தொடரில் மீதமுள்ள 4 டெஸ்டுகளில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றால் டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.
பிஜிடி தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில நாள்களில் தெ.ஆ. அணி இலங்கையையும், இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும் வீழ்த்தியுள்ளன.
ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதால் டபிள்யுடிசி புள்ளிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 3-வது இடத்துக்கு இறங்கியது.
கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்தை இங்கிலாந்து அணி தோற்கடித்ததால், நிலவரங்கள் மாறியுள்ளன.
பிஜிடி தொடரின் மீதமுள்ள 4 ஆட்டங்களில் 2-ல் இந்திய அணி வெற்றி பெற்றாலே போதும் என்கிற சாதகமான நிலை தற்போது உருவாகியுள்ளது.
பிஜிடி தொடரில் இந்திய அணி 5-0, 4-1, 4-0, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
ஒரு வேளை இத்தொடரில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்றால், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி வெற்றி பெறாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணியால் பிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது.
பிஜிடி தொடரில் இந்தியா 3-2 என வெற்றி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலிய தொடரில் இலங்கை அணி ஒரு டெஸ்டிலாவது டிரா செய்ய வேண்டும்.
அதேபோல, இத்தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்யும் பட்சத்தில், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் இலங்கை அணி குறைந்தது 1-0 என வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணியால் டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.