தென்னாப்பிரிக்க டி20 தொடர்: இந்திய அணியில் கில், பாண்டியா | Team India Squad |

காயத்திலிருந்து குணமடைவதைப் பொறுத்து கில் இடம்பெறுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Team India's Squad for South Africa T20 Series announced: Shubman Gill, Hardik Pandya is back
ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா (கோப்புப்படம்)
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன.

முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 9-ல் கட்டாக்கில் நடைபெறுகிறது. கடைசி ஆட்டம் டிசம்பர் 19 அன்று அஹமதாபாதில் நடைபெறுகிறது. இதற்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியை பிசிசிஐ புதன்கிழமை அறிவித்தது.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

உடற்தகுதியைப் பொறுத்து ஷுப்மன் கில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்.

ஆஸ்திரேலிய டி20 தொடரில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி இந்தத் தொடரில் சேர்க்கப்படவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஹார்திக் பாண்டியா சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார். இவரும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

டி20 தொடர் அட்டவணை

  • முதல் டி20 - டிசம்பர் 9, கட்டாக்

  • 2-வது டி20 - டிசம்பர் 11, புது சண்டிகர்

  • 3-வது டி20 - டிசம்பர் 14, தரம்சாலா

  • 4-வது டி20 - டிசம்பர் 17, லக்னௌ

  • 5-வது டி20 - டிசம்பர் 19, அஹமதாபாத்

Summary

Team India's Squad for South Africa T20 Series announced: Shubman Gill, Hardik Pandya is back. Gill's participation is subjected to his recovery, says BCCI.

Team India | Team India Squad | Suryakumar Yadav | Shubman Gill | Hardik Pandya |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in