2025-ல் இந்திய அணி: முழு அட்டவணை

சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை டி20யில் இந்திய அணி விளையாடுகிறது.
2025-ல் இந்திய அணி: முழு அட்டவணை
ANI
1 min read

2025-ல் இந்திய அணி 18 டி20, 12 ஒருநாள் மற்றும் 10 டெஸ்டுகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டுடன் இந்திய அணி 2025-ஐ தொடங்குகிறது.

ஜனவரி 3 அன்று தொடங்கும் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணியால் தக்கவைக்க முடியும். இடையில் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடனான தொடர்களுடன் 2025-ஐ நிறைவு செய்கிறது.

2025-ல் இந்திய அணிக்கான முழு அட்டவணை

பிஜிடி தொடர்

  • சிட்னி டெஸ்ட் - ஜனவரி 3 - 7

இங்கிலாந்து டி20 தொடர்

  • முதல் டி20 - ஜனவரி 22 (கொல்கத்தா)

  • 2-வது டி20 - ஜனவரி 25 (சென்னை)

  • 3-வது டி20 - ஜனவரி 28 (ராஜ்கோட்)

  • 4-வது டி20 - ஜனவரி 31 (புனே)

  • 5-வது டி20 - பிப்ரவரி 2 (மும்பை)

இங்கிலாந்து ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் - பிப்ரவரி 6 (நாக்பூர்)

  • 2-வது ஒருநாள் - பிப்ரவரி 9 (கட்டக்)

  • 3-வது ஒருநாள் - பிப்ரவரி 12 (அஹமதாபாத்)

சாம்பியன்ஸ் கோப்பை

  • இந்தியா vs வங்கதேசம் - பிப்ரவரி 20 (துபாய்)

  • இந்தியா vs பாகிஸ்தான் - பிப்ரவரி 23 (துபாய்)

  • இந்தியா vs நியூசிலாந்து - மார்ச் 2 (துபாய்)

  • அரையிறுதி (தகுதி பெற்றால்) - மார்ச் 4 (துபாய்)

  • இறுதி (தகுதி பெற்றால்) - மார்ச் 9 (துபாய்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று (தகுதி பெற்றால்)

  • ஜூன் 2025 (லார்ட்ஸ்)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

  • முதல் டெஸ்ட் - ஜூன் 20 - ஜூன் 24 (லீட்ஸ்)

  • 2-வது டெஸ்ட் - ஜூலை 2 - ஜூலை 6 (பிர்மிங்கம்)

  • 3-வது டெஸ்ட் - ஜூலை 10 - ஜூலை 14 (லார்ட்ஸ்)

  • 4-வது டெஸ்ட் - ஜூலை 23 - ஜூலை 27 (மான்செஸ்டர்)

  • 5-வது டெஸ்ட் - ஜூலை 31 - ஆகஸ்ட் 4 (ஓவல்)

வங்கதேசம் பயணம் - ஆகஸ்ட் 2025

  • 3 ஒருநாள், 3 டி20 கொண்ட தொடர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா வருகை - அக்டோபர் 2025

  • இரு டெஸ்டுகள் கொண்ட தொடர்

ஆசியக் கோப்பை டி20 - அக்டோபர், நவம்பர்

ஆஸ்திரேலியப் பயணம் - நவம்பர்

  • 3 ஒருநாள், 5 டி20 கொண்ட தொடர்கள்

தென்னாப்பிரிக்கா இந்தியா வருகை - நவம்பர், டிசம்பர்

  • இரு டெஸ்டுகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கொண்ட தொடர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in