டி20 உலகக் கோப்பை: முக்கியப் பெயர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய ஆஷ்டன் அகார் இந்த உலகக் கோப்பையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை: முக்கியப் பெயர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஐசிசியிடம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் நேற்று உலகக் கோப்பைக்கான அணிகளை அறிவித்தன.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கி வரும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஜேசன் பெரண்டார்ஃப், ஸ்பென்செர் ஜான்சன் உள்ளிட்டோருக்கு அணியில் இடமில்லை.

கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய ஆஷ்டன் அகார் இந்த உலகக் கோப்பையிலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேம்ரூன் கிரீன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேம்ரூன் கிரீன், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் அகார், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நேதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

டி20 உலகக் கோப்பையில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ல் ஓமனை பார்பேடாஸில் எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள 'பி' பிரிவில் இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in