
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ள 574 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25-ல் ஜெட்டாவில் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தார்கள். ஐபிஎல் நிர்வாகங்களிடம் கருத்துகளைப் பெற்ற நிலையில், மெகா ஏலத்தில் பங்கெடுக்கவுள்ளவர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
சர்வதேச டி20யில் அறிமுகம் ஆகாத 330 வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் 318 பேர் இந்திய வீரர்கள்.
மொத்தம் 204 இடங்கள் ஏலம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 70 பேர் இடம்பெறவுள்ளார்கள். 2018 ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு முதன்முறையாக பிரபல வீரர்கள் பட்டியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரபல வீரர்கள் முதல் பட்டியலில் ஜாஸ் பட்லர், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பிரபல வீரர்கள் இரண்டாவது பட்டியலில் யுஸ்வேந்திர சஹால், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கேஎல் ராகுல், முஹமது ஷமி, முஹமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் உள்ளிட்டோர் ஐபிஎல் ஏலம் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பெற்றுள்ளார். இவர் கடைசியாக 2014-ல் டி20 ஆட்டத்தில் விளையாடியுள்ளார். கவனிக்கத்தக்க வகையில் 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் ஏலம் நவம்பர் 24 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
ஐபிஎல் ஏலம் 2025: மொத்த வீரர்கள் பட்டியல்