
கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கியுள்ளது தமிழக அரசு.
கடந்த நவ.10-ல் தொடங்கி 17-ம் தேதி வரை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழக வீரர்கள் தங்கம் உள்பட பல பதக்கங்களை வென்றார்கள்.
மகளிர் ஒற்றையர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா.
செஸ் உலக சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி வழங்கியுள்ள தமிழக அரசு, காஸிமாவுக்கு எவ்வித பரிசுத்தொகையும் வழங்காததால் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகையை இன்று வழங்கியுள்ளார் தமிழக துணை முதல்வர் உதயதி ஸ்டாலின்.
மேலும், அப்போட்டியில் இரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ. 50 லட்சமும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சமும் இன்று வழங்கப்பட்டுள்ளன.