
விஜய் ஹசாரே கோப்பை 2024-25 போட்டிக்கான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி டிசம்பர் 21 முதல் ஜனவரி 18 முதல் நடைபெறவுள்ளது. 6 லீக் ஆட்டங்களில் தமிழக அணி விளையாடவுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்குத் தமிழக அணி தகுதிபெறவில்லை. இதனால் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எம். சித்தார்த் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 16 வயது தீபேஷ், 20 வயது அச்யுத் அணியில் தேர்வாகியுள்ளார்கள்.
தமிழக அணி: சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், துஷார் ரஹேஜா, ஷாருக் கான், முஹமது அலி, சந்தீப் வாரியர், டி தீபேஷ், சிவி அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், சிவி வருண், விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்