அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா (17) 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
6-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனைகள் நாகஜோதி, காசிமா, மித்ரா ஆகியோர் பங்கேற்றார்கள். இதில் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மகளிர் தனிப்பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு, மகளிர் குழு என மூன்று பிரிவுகளில் காசிமா தங்கம் வென்றுள்ளார்.
நவம்பர் 21 அன்று பதக்கங்களுடன் தமிழ்நாடு வருகிறார் காசிமா. கடந்த ஜூலையில் காசிமா உள்பட மூன்று வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மரியம் இருதயம் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ. 1.50 லட்சம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.