டி20 உலகக் கோப்பை: புள்ளிவிவரங்கள்

இந்த உலகக் கோப்பையில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பைANI
1 min read

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது.

பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் உட்பட சில சாதனைகளை பார்போம்.

அதிக ரன்கள்

குர்பாஸ் - 281 ரன்கள்

ரோஹித் சர்மா - 257 ரன்கள்

ஹெட் - 255 ரன்கள்

அதிக விக்கெட்டுகள்

அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள்

ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள்

பும்ரா - 15 விக்கெட்டுகள்

தனிநபர் அதிகபட்சம் - பூரன் 98 (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக). இப்போட்டியில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

அதிக அரை சதங்கள் - குர்பாஸ், ரோஹித் சர்மா (தலா 3 அரை சதங்கள்)

அதிக சிக்ஸர்கள் - பூரன் (17 சிக்ஸர்கள்)

அதிக பவுண்டரிகள் - ஹெட் (26 பவுண்டரிகள்)

சிறந்த பந்துவீச்சு - ஃபரூக்கி 5-9 (உகாண்டாவுக்கு எதிராக)

ஐபிஎல் கோப்பைகள்

தோனி - 5

ரோஹித் சர்மா - 5

டி20 உலகக் கோப்பை

தோனி - 1

ரோஹித் சர்மா - 1

டி20 இறுதிச் சுற்று ஆட்டங்களில் ரோஹித் சர்மா

விளையாடியது - 8

வெற்றி - 8

* அணியில் ஒரு தமிழனும் இல்லாமல் இந்திய அணி வென்றுள்ள முதல் உலகக் கோப்பை.

உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள்

கபில் தேவ் - 1983

தோனி - 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை

ரோஹித் சர்மா - 2024 டி20 உலகக் கோப்பை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in