மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 3 அன்று தொடங்கி அக்டோபர் 20 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4 அன்று விளையாடவுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற 14 வீராங்கனைகள் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய மகளிர் அணி
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், டி ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டில், சஜீவன் சஜனா.
உமா சேத்ரி, தனுஜா கன்வர், சைமா ஆகியோர் மாற்று வீராங்கனைகளாக இந்திய அணியுடன் பயணிக்கிறார்கள்.