டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இரண்டு இடங்களுக்குப் போட்டியிடும் 4 அணிகள்

ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இரண்டு இடங்களுக்குப் போட்டியிடும் 4 அணிகள்
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இரண்டு இடங்களுக்குப் போட்டியிடும் 4 அணிகள்@icc

டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய ஒவ்வொரு அணிகளுக்கும் எந்த அளவிற்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய அணிகள் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்து:

ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடனும் புள்ளிகள் பட்டியலில் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

இங்கிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே போதுமானது. ஓமனை 101 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றதால் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் +3.081 என உயர்ந்தது. ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியடைந்தால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால், ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். இதில் ஏதேனும் ஒரு ஆட்டம் மழையால் ரத்தானாலும் இங்கிலாந்து அணி வெளியேறி, ஸ்காட்லாந்து அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.

வங்கதேசம்:

வங்கதேச அணி 4 புள்ளிகளுடனும், நெதர்லாந்து அணி 2 புள்ளிகளுடனும் புள்ளிகள் பட்டியலில் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். ஆனால், வங்கதேச அணி தோல்வியடைந்து நெதர்லாந்து அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். இரு ஆட்டங்களின் முடிவையும் சேர்த்து 53 ரன்கள் வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய. அதாவது வங்கதேச அணி நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினால் நெதர்லாந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். இதில் ஏதேனும் ஒரு ஆட்டம் மழையால் ரத்தானாலும் நெதர்லாந்து அணி வெளியேறி, வங்கதேச அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in