டி20 உலகக் கோப்பை, நாள் 13: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்

இலங்கை, நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளன.
டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை@icc
1 min read

ஆட்ட முடிவுகள்

வங்கதேசம் vs நெதர்லாந்து

நெதர்லாந்து அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது வங்கதேச அணி.

வங்தேசம் 159/5 (ஷகிப் அல் ஹசன் 64*, தன்ஸித் ஹசன் 35, ஆர்யன் தத் 2-17, பால் வான் மீக்கிரின் 2-15), நெதர்லாந்து 134/8 (எங்கில்பிரிட் 33, ரிஷாத் ஹொசைன் 3-33)

ஓமன் vs இங்கிலாந்து

48 ரன்கள் என்ற இலக்கை 19 பந்துகளில் அடித்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நெட் ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து அணியை விட முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

ஓமன் 47/10 (ஷோயப் கான் 11, அடில் ரஷித் 4-11, ஆர்ச்சர் 3-12, மார்க் வுட் 3-12), இங்கிலாந்து 50/2 (பட்லர் 24)

ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினி

பப்புவா நியூ கினி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் அணி.

பப்புவா நியூ கினி 95/10 (கிப்லின் 27, ஃபரூக்கி 3-16), ஆப்கானிஸ்தான் 101/3 (குல்புதின் நைப் 49)

முக்கிய நிகழ்வுகள்

* ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் இலக்கை எட்டி, டி20 உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

* வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணியும் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து வெளியேறின.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in