ஆட்ட முடிவுகள்
இந்தியா vs அமெரிக்கா
இந்திய அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி அமெரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அமெரிக்கா 110/8 (நிதிஷ் குமார் 27, அர்ஷ்தீப் சிங் 4-9, ஹார்திக் பாண்டியா 2-14), இந்தியா 111/3 (சூர்யகுமார் யாதவ் 50*, துபே 31*, நெட்ராவால்கர் 2-18)
மேற்கிந்தியத் தீவுகள் vs நியூசிலாந்து
மேற்கிந்தியத் தீவுகள் 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தோல்வியால் நியூசிலாந்து அணிக்கு, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் 149/9 (ரூதர்ஃபோர்ட் 68*, போல்ட் 3-16, செளதி 2-21), நியூசிலாந்து 136/9 (பிலிப்ஸ் 40, ஜோசப் 4-19, மோட்டீ 3-25).
முக்கிய நிகழ்வுகள்
* ஐசிசி அறிமுகப்படுத்திய புதிய விதியான ஸ்டாப் கிளாக் விதி மூலம் 5 ரன்கள் அபராதம் பெற்ற முதல் அணி என்ற பெயரை பெற்றுள்ளது அமெரிக்க அணி.
* அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் விசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. மேலும் டி20-யில் அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது.
* ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தை வெளியேற்றுவதைப் போல ஆஸ்திரேலியா விளையாட வாய்ப்புள்ளது என்கிற அர்த்தத்தில் ஹேசில்வுட் பேசியிருப்பது விமர்சனத்தை வரவழைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் “அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், அதனால் இவ்வாறு பேசியிருப்பார்” என இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.