இந்தியா - இங்கிலாந்து அரையிறுதிக்கு மாற்று நாள் ஏன் இல்லை?

மழையால் ஆட்டம் கைவிடப்படும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்தியா - இங்கிலாந்து அரையிறுதிக்கு மாற்று நாள் ஏன் இல்லை?
இந்தியா - இங்கிலாந்து அரையிறுதிக்கு மாற்று நாள் ஏன் இல்லை?ANI

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்படும் நிலையில், இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் 2-வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் மழையால் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது அரையிறுதிக்கு மாற்று நாள் உள்ளதா?

2-வது அரையிறுதி ஆட்டத்திற்கும், இறுதிச் சுற்றுக்கும் இடையே ஒரு நாள் மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (Reserve Day) வழங்கப்படாது. மழையால் ஆட்டம் கைவிடப்படும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

கயானாவில் உள்ளூர் நேரப்படி ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. மழையின் அபாயம் இருக்கும் காரணத்தால், ஆட்டம் தொடங்கும் நேரத்தில் இருந்து 250 நிமிடங்கள் வரை ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டம் உள்ளூர் நேரப்படி மதியம் 2.40 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.10 மணிக்கு) தொடங்கினாலும் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடப்படும்.

அதேபோல இரு அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டுமே, முடிவு அறிவிக்கப்படும். இல்லையெனில் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்படும். ஒருவேளை 10 ஓவர்கள் ஆட்டமாக தொடங்கும் பட்சத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 4.14 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.44 மணிக்கு) தொடங்கவேண்டும் என ஐசிசி செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in