ஆட்ட முடிவுகள்
தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து
சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி.
தென்னாப்பிரிக்கா 163/6 (டி காக் 65, மில்லர் 43, ஆர்ச்சர் 3-40) இங்கிலாந்து 156/6 (ஹாரி புரூக் 53, மஹாராஜ் 2-25, ரபாடா 2-32)
மே.இ. தீவுகள் vs அமெரிக்கா
129 என்ற இலக்கை 10.5 ஓவர்களில் எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மே.இ. தீவுகள் அணி. இது அமெரிக்க அணிக்கு 2-வது தோல்வியாகும்.
அமெரிக்கா 128 (கோஸ் 29, ரோஸ்டன் சேஸ் 3-19, ரஸ்ஸல் 3-31) மே.இ. தீவுகள் 130/1 (ஷாய் ஹோப் 82)
முக்கிய நிகழ்வுகள்
* டி20 உலகக் கோப்பையின் ஒரு பருவத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையைப் பூரன் (17 சிக்ஸர்கள்) படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012-ல் கெயில் 16 சிக்ஸர்கள் அடித்ததே அதிகமாக இருந்தது.
* தென்னாப்பிரிக்க அணிக்காக டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டெய்னை (30 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் நார்க்கியா (31 விக்கெட்டுகள்).
இன்றைய ஆட்டங்கள்
இந்தியா vs வங்கதேசம் (இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு)
ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் (இந்திய நேரப்படி ஞாயிறு காலை 6 மணிக்கு)