கம்மின்ஸ் ஹாட்ரிக்: வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா, மே.இ. தீவுகள் - அமெரிக்கா ஆகிய அணிகள் இன்று விளையாடவுள்ளன.
வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!
வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!@icc
1 min read

ஆட்ட முடிவுகள்

இந்தியா vs ஆப்கானிஸ்தான்

சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா 181/8 (சூர்யகுமார் யாதவ் 53, ஹார்திக் பாண்டியா 32, ஃபரூக்கி 3-33, ரஷித் கான் 3-26) ஆப்கானிஸ்தான் 134 (ஓமர்ஸாய் 26, பும்ரா 3-7, அர்ஷ்தீப் சிங் 3-36)

ஆஸ்திரேலியா vs வங்கதேசம்

மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், டிஎல் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் 140/8 (ஷான்டோ 41, ஹிருதாய் 40, கம்மின்ஸ் 3-29) ஆஸ்திரேலியா 100/2 (வார்னர் 53, ஹெட் 31, ரிஷாத் ஹொசைன் 2-23)

முக்கிய நிகழ்வுகள்

* டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 8-வது வீரர், 2-வது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார் கம்மின்ஸ்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால் எங்களின் நம்பிக்கை குறைந்துவிடாது என மே.இ. தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி கூறியுள்ளார்.

இன்றைய ஆட்டங்கள்

இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா (இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு)

மே.இ. தீவுகள் vs அமெரிக்கா (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6 மணிக்கு)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in