டி20 உலகக் கோப்பை, நாள் 17: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்

டி20 உலகக் கோப்பையில் 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காத முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் ஃபெர்குசன்.
டி20 உலகக் கோப்பை, நாள் 17: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்
டி20 உலகக் கோப்பை, நாள் 17: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்@icc
1 min read

ஆட்ட முடிவுகள்

நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி

ஏற்கெனவே சூப்பர் 8 வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பப்புவா நியூ கினி 78 (சார்ல்ஸ் அமினி 17, லாகி ஃபெர்குசன் 3-0) நியூசிலாந்து 79/3 (கான்வே 35, மொரியா 2-4)

மே.இ. தீவுகள் vs ஆப்கானிஸ்தான்

இரு அணிகளும் தங்களது முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், மே.இ. தீவுகள் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

மே.இ. தீவுகள் 218/5 (பூரன் 98, குல்பதின் நைப் 2-14) ஆப்கானிஸ்தான் 114 (இப்ராஹிம் ஸத்ரான் 38, மெக்காய் 3-14)

முக்கிய நிகழ்வுகள்

* சர்வதேச டி20 கிரிககெட்டில் 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காத 2-வது வீரர், டி20 உலகக் கோப்பையில் முதல் வீரர் என்கிற சாதனைகளை பப்புவா நியூ கினி அணிக்கு எதிராக நிகழ்ததியுள்ளார் லாகி ஃபெர்குசன். முன்னதாக, 2021-ல் கனடா வீரர் பின் ஜாஃபர் 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

* மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஓமர்ஸாய் 36 ரன்கள் கொடுத்து, டி20 உலகக் கோப்பையில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையைச் செய்துள்ளார். ஏற்கெனவே இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர் பிராட் (36 ரன்கள்) இடம்பெற்றிருந்தார்.

* முதல் 6 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து டி20 உலகக் கோப்பையில் பவர்பிளேவில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளது மே.இ. தீவுகள் அணி.

* டி20 ஆட்டங்களில் மே.இ. தீவுகள் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் பூரன். இதுவரை 128 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு கெயில் 124 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

* நெதர்லாந்து அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 12 டி20 ஆட்டங்களில் விளையாடிய எங்கில்பிரிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

* நடப்பு டி20 உலகக் கோப்பையே தனது கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என நியூசி. வீரர் டிரென்ட் போல்ட் தெரிவித்திருந்த நிலையில், தனது கடைசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in