டி20 உலகக் கோப்பை, நாள் 16: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்

வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
டி20 உலகக் கோப்பை, நாள் 16: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்
டி20 உலகக் கோப்பை, நாள் 16: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்@icc
1 min read

ஆட்ட முடிவுகள்

பாகிஸ்தான் vs அயர்லாந்து

ஏற்கெனவே சூப்பர் 8 வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது பாகிஸ்தான் அணி.

அயர்லாந்து 106/9 (ஜோஷ் லிட்டில் 22, ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3-22, இமாத் வாசிம் 3-8) பாகிஸ்தான் 111/7 (பாபர் ஆஸம் 32, மெக்கர்த்தி 3-15)

வங்கதேசம் vs நேபாளம்

21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி.

வங்கதேசம் 106 (ஷகிப் அல் ஹசன் 17, சோம்பால் 2-10, லமிச்சானே 2-17) நேபாளம் 85 (குஷால் 27, தன்ஸிம் ஹசன் 4-7)

இலங்கை vs நெதர்லாந்து

83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது.

இலங்கை 201/6 (குசால் மெண்டிஸ் 46, வேன் பீக் 2-45) நெதர்லாந்து 118 (ஸ்காட் எட்வர்ட்ஸ் 31, நுவான் துஷாரா 3-24)

முக்கிய நிகழ்வுகள்

* டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தார் நேபாள வீரர் லமிச்சானே. தனது 54-வது ஆட்டத்தில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பையில் குறைந்த ரன்களை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றது வங்கதேசம் (106 ரன்கள்). முன்னதாக தென்னாப்பிரிக்க அணி 113 ரன்கள் அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in