டி20 உலகக் கோப்பை, நாள் 15: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்

இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
டி20 உலகக் கோப்பை, நாள் 15: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்
டி20 உலகக் கோப்பை, நாள் 15: ஆட்ட முடிவுகளும் முக்கிய நிகழ்வுகளும்ANI

ஆட்ட முடிவுகள்

இந்தியா vs கனடா

ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஒரு தோல்வியும் இன்றி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.

இங்கிலாந்து vs நமீபியா

மழையின் காரணமாக ஆட்டம் 10 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது.

இங்கிலாந்து 122/5 (ஹாரி புரூக் 47, ட்ரம்பெல்மேன் 2-31) நமீபியா 84/3 (வேன் லிங்கன் 33, ஆர்ச்சர் 1-15)

ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து

மிகவும் பரப்பரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்தது.

ஸ்காட்லாந்து 180/5 (மெக்மல்லன் 60, மேக்ஸ்வெல் 2-44) ஆஸ்திரேலியா 186/5 (ஹெட் 68, ஸ்டாய்னிஸ் 59, மார்க் வாட் 2-34)

முக்கிய நிகழ்வுகள்

* நமீபிய வீரர் டேவிட் வீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 54 டி20 மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவுள்ளார்.

* இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, “ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்துவிட்டோம்” என அந்த அணியின் அனுபவமிக்க வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in