நடுவரின் தீர்ப்பால் வங்கதேசம் தோல்வி?: ஐசிசி விதி சொல்வது இதுதான்

“4 ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வங்தேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும்”.
ஐசிசி
ஐசிசி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி தோல்வி அடைந்ததற்கு நடுவரின் தவறான தீர்ப்பே காரணம் என சர்ச்சை எழுந்த நிலையில் ஐசிசி விதி சொல்வது என்ன? என்பதைப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்தேச அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் 17-வது ஓவரின் 2-வது பந்தில் மஹ்முதுல்லா லெக் சைடில் விளையாட முயற்சி செய்தபோது, பந்து அவரது பேடில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. அப்போது, தென்னாப்பிரிக்க அணி அப்பீல் செய்ய நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து டிஆர்எஸ் முறையில் மஹ்முதுல்லா அப்பீல் செய்ய, 3-வது நடுவர் அதனை நாட் அவுட் என அறிவித்தார்.

முன்னதாக, களத்தில் இருந்த நடுவர் அவுட் என தெரிவித்ததால், அந்த பந்து பவுண்டரி சென்றும் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் வங்தேச அணிக்கு 4 ரன்கள் கிடைக்கவில்லை.

ஐசிசி விதிப்படி களத்தில் இருக்கும் நடுவர் அவுட் என சொன்ன பிறகு, அந்த பந்தில் எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒருவேளை நாட் அவுட் என அறிவித்த பிறகு அப்பீல் செய்து, அது அவுட் என தெரிந்தாலும் அந்த பந்தில் எடுக்கப்பட்ட ரன்கள் கணக்கில் சேர்க்கப்படாது.

இந்நிலையில் இது தவறான தீர்ப்பு என்றும், அந்த 4 ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வங்தேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் உட்பட பல ரசிகர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in