ஒரு தோல்வியும் இன்றி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்தியா - கனடா ஆட்டம் மழையால் ரத்து!
இந்தியா - கனடா ஆட்டம் மழையால் ரத்து!ANI

இந்தியா - கனடா இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

இந்நிலையில் இன்று இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் ஃபுளோரிடாவில் நடைபெறவிருந்தது. ஆனால், ஆரம்பம்முதல் மழையின் அச்சுறுத்தல் இருந்த காரணத்தால், ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி 7 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. கனடா அணி 4 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்றது. அமெரிக்கா - அயர்லாந்து இடையிலான நேற்றைய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in