டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

ஆஸ்திரேலிய அணி பவர்பிளே முடிவதற்கு முன்பாக ஆட்டத்தை முடித்தது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!
1 min read

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 3 வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - நமீபியா ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நமீபிய அணி 17 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக எராஸ்மஸ் 43 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹேசில்வுட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி பவர்பிளே முடிவதற்கு முன்னதாக ஆட்டத்தை முடித்தது. 5.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹெட் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 34 ரன்களும், மிட்செல் மார்ஷ் 9 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு 3-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக, தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்தை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியும் 3 வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதேபோல, ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்த நமீபிய அணி அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. மேலும், ஓமன் அணி 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in