டி20 உலகக் கோப்பை கோலாகலமாகத் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி!

அதிரடியாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.
முதல் ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி!
முதல் ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி!ANI

டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் கனடாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அமெரிக்க அணி.

ஐசிசி டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கி ஜூன் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதின.

டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் நிகோலஸ் கிர்டான் 51 ரன்களும், இறுதியில் ஷ்ரேயஸ் மொவ்வா 32 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய அமெரிக்க அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். ஆன்ட்ரிஸ் கவுஸ் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய வங்தேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக மஹ்முதுல்லா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in