
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆட்டம் இது. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முஹமது ஷமி முதன்முறையாக இந்திய அணிக்காக விளையாடுகிறார். இதுவே இந்த டி20 மீது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், முதல் டி20 ஆட்டத்தில் முஹமது ஷமி விளையாடவில்லை என்ற அறிவிப்பை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் டி20யில் முஹமது ஷமி, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா விளையாடவில்லை என சூர்யகுமார் யாதவ் அறிவித்தார்.
இங்கிலாந்து அணி
ஜாஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், ஃபில் சால்ட், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டன், ஜேகப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, நிதிஷ் ரெட்டி, அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.