கேப்டன் என்பதால் எதுவும் மாறப்போவதில்லை: சூர்யகுமார் யாதவ்

ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே நல்ல நட்பு இருப்பது அவசியம்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்ANI
1 min read

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த தலைவராகவும் செயல்பட்டார் என்று சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 ஆட்டம் இன்று மாலை தொடங்குகிறது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், “கம்பீருடன் நல்ல புரிதல் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் பேசியதாவது

“டி20 உலகக் கோப்பையில் எப்படி விளையாடினோமோ அதேபோல் இத்தொடரிலும் விளையாடுவோம். கேப்டன் என்பதால் எனது பேட்டிங்கோ அல்லது எதுவும் மாறப்போவதில்லை. எப்போதும் போல நாங்கள் ஆட்டத்தை அணுகுவோம்.

10 ஆண்டுகளாக நான் கம்பீருடன் பணியாற்றி வருகிறேன். 2018 ஐபிஎல் போட்டியில் நான் அணி மாறினாலும், தொடர்ந்து அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். கம்பீருடன் நல்ல புரிதல் இருக்கிறது. ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே நல்ல நட்பு இருப்பது அவசியம். இத்தொடருக்காக மிகவும் ஆவலாக உள்ளேன்.

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த தலைவராகவும் செயல்படுவார். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

எப்போதும் போல் எனது ஆட்டத்தை விளையாடி மற்றவர்களுக்கு நெருக்கடி அளிப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in