துலீப் கோப்பையின் முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியான துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஜெயிஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற பிரபல வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவும் இப்போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காயம் காரணமாக முதல் சுற்றில் இருந்து விலகியுள்ளார்.
புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் டிஎன்சிஏ லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்ட நிலையில் துலீப் கோப்பையின் முதல் சுற்றில் இருந்து விலகியுள்ளார்.