இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு

2011-ல் அர்ஜூனா விருது, 2019-ல் பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2021-ல் கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ளார் சுனில் சேத்ரி. கேல் ரத்னா விருதை வென்ற முதல் இந்திய கால்பந்து வீரரும் சேத்ரி தான்.
சுனில் சேத்ரி
சுனில் சேத்ரி

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியக் கால்பந்து அணிக்காக 19 ஆண்டுகளாக விளையாடி வரும் சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (150 ஆட்டங்கள்) மற்றும் அதிக கோல்களை (94 கோல்கள்) அடித்த செய்த வீரர் எனும் பெருமையை பெற்றவர்.

39 வயதான இவர் கடந்த 2005 முதல் இந்தியக் கால்பந்து அணியில் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு பிறகு அதிக கோல் அடித்தவரும் சேத்ரி தான்.

இந்நிலையில், ஜூன் 6 அன்று நடைபெற உள்ள குவைத் அணியுடனான ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டி தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

2011-ல் அர்ஜூனா விருது, 2019-ல் பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2021-ல் கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ளார் சுனில் சேத்ரி. கேல் ரத்னா விருதை வென்ற முதல் இந்தியக் கால்பந்து வீரரும் சேத்ரி தான்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in