பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் ஈட்டி எறிதல் (எஃப் 64 பிரிவு) விளையாட்டின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் 70.59 மீ. தூரம் வீசி இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் தனது தனிப்பட்ட பராலிம்பிக்ஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சுமித் அன்டில் டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கப் பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸில் 2 தங்கம் வென்ற 3-வது இந்தியர் எனும் பெருமையையும் பெற்றார்.
தங்கப் பதக்கம் வென்ற சுமித் அன்டிலை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பலரும் பாராட்டி உள்ளனர்.