தனது பெயரில் தொடங்கப்படவுள்ள பாட்மிண்டன் பயிற்சி மையத்துக்கு பி.வி. சிந்து அடிக்கல் நாட்டினார்.
2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும், 2020 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றவர் பி.வி. சிந்து. இவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் அடுத்தத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் தனது பெயரில் பாட்மிண்டன் பயிற்சி மையத்தை தொடங்கவுள்ளார் பி.வி. சிந்து.
விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த பயிற்சி மையத்துக்கு பி.வி. சிந்து இன்று (நவ.8) அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பான புகைப்படங்களை பி.வி. சிந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.