
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலிருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு டெஸ்டுகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஓவலில் வியாழனன்று தொடங்குகிறது.
கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக கடைசி டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். ஸ்டோக்ஸ் உள்பட அந்த அணியில் மொத்தம் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடுமையான பணிச்சுமை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் லியம் டாசன் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்குப் பதில் மாற்று வீரர்களாக ஜேக்கப் பெத்தெல், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜாஷ் டங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஸ்டோக்ஸ் இல்லாததால் ஆலி போப் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.
சுழற்பந்துவீச்சுக்கு ஜேக்கப் பெத்தெல் மற்றும் ஜோ ரூட் மட்டுமே உள்ளார்கள். முதல் 4 டெஸ்டுகளில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் கடைசி டெஸ்டிலும் விளையாடுகிறார்.
ஸ்டோக்ஸ் விலகியிருப்பது இங்கிலாந்துக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 17 விக்கெட்டுகளுடன் இவர் தான் முதலிடத்தில் உள்ளார். மான்செஸ்டர் டெஸ்டில் சதமடித்தார். கடைசி இரு டெஸ்டுகளிலும் இவர் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இங்கிலாந்து அணி
ஸாக் கிராலி
பென் டக்கெட்
ஆலி போப் (கேப்டன்)
ஜோ ரூட்
ஹாரி புரூக்
ஜேக்கப் பெத்தெல்
ஜேமி ஸ்மித்
கிறிஸ் வோக்ஸ்
கஸ் அட்கின்சன்
ஜேமி ஓவர்டன்
ஜோஷ் டங்
India v England | Ind v Eng | India vs England | India v England | England Team | England Squad | Ben Stokes | Jofra Archer | India Tour of England | India England Test Series | Oval Test | 5th Test | Jacob Bethell | Josh Tongue | Jamie Overton | Gus Atkinson | Ind vs Eng