டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் நடைபெறுகிறது.
இந்நிலையில், காயத்தால் நடப்பு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் அனுபவமிக்க ஏஞ்சலோ மேத்யூஸ் இடம்பெற்றுள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் டி20 ஆட்டத்தில் பங்கேற்காத வெல்லாலகேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஐபிஎல்-ல் கலக்கிய பதிரனா அணியில் இடம் பெற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி: வனிந்து ஹசரங்கா (கேப்டன்), அசலங்கா (துணை கேப்டன்), குசால் மெண்டிஸ், நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்ஜெயா டி சில்வா, தீக்ஷனா, வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா, நுவான் துஷாரா, பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா
மாற்று வீரர்கள்: அசிதா பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜபக்சே மற்றும் லியானகே.