மீண்டும் டாஸில் தோற்ற ருதுராஜ்!

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 9 ஆட்டங்களில் ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்றுள்ளார்.
மீண்டும் டாஸில் தோற்ற ருதுராஜ்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மீண்டும் டாஸ் தோற்றார்.

இந்த ஆட்டத்தில் கூடுதல் பேட்டருடன் களமிறங்கவுள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்தார். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்பியதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in