இறுதிச் சுற்று: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு

இரு அணிகளும் பெரும்பாலும் மாற்றம் எதுவும் இல்லாமல் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இறுதிச் சுற்று: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்திய கேகேஆர் முதல் அணியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கேகேஆரிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சைத் தேர்வு செய்யவிருந்ததாகக் கூறினார்.

இரு அணிகளும் பெரும்பாலும் மாற்றம் எதுவும் இல்லாமல் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. சூழலுக்கு ஏற்ப இம்பாக்ட் விதியைப் பயன்படுத்தி அணிகளில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in