
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 வீரர்களைத் தக்கவைத்த நிலையில், ஏலத்தில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாதில் சிக்ஸர் மழை பொழியும் என்பதால், புவனேஷ்வர் குமார் இடத்தை நிரப்ப முஹமது ஷமியும், நடராஜன் இடத்தை நிரப்ப ஹர்ஷல் படேலும் முறையே 10 கோடி ரூபாய் மற்றும் 8 கோடி ரூபாய்க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கூடுதல் பலத்துக்கு பேட் கம்மின்ஸ், பிரைடன் கார்ஸ் போன்ற வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களும் உள்ளார்கள்.
சுழற்பந்துவீச்சுக்கு ராகுல் சஹார், ஆடம் ஸாம்பா என மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது சன்ரைசர்ஸ். இது தவிர இரு கைகளிலும் பந்துவீசக்கூடிய இலங்கை ஆல்-ரவுண்டர் கமிந்து மெண்டிஸையும் அணியில் வைத்துள்ளது.
பேட்டிங்கில் கிளாஸென், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி அதிரடி வரிசையில் கூடுதலாக இஷான் கிஷன், அபினவ் மனோகர் இணைந்துள்ளார்கள்.
கடந்தமுறை இறுதிச்சுற்றில் கேகேஆரிடம் தோற்ற சன்ரைசர்ஸ் இம்முறை புதிய வீரர்களின் வரவால் 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றுமா?